தம்பி பிரேம்ஜி திருமணத்தில் பாட்டு பாடிய வெங்கட் பிரபு; என்ன பாடல் பாருங்க: வைரல் வீடியோ

முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் இந்து என்பவருடன் உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பாடியிருக்கிறார்.

முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் இந்து என்பவருடன் உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பாடியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
venkat prabhu, mersal, ajith, vijay
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கங்கை அமரனின் மகனும், இயங்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜி 45 வயது ஆன பிறகும், முரட்டு சிங்கிளாக வலம் வந்த நிலையில், அவருக்கு திருத்தணி முருகன் கோயிலில் இந்து என்பவருடன் உடன் திருமணம்  நடைபெற்றது. திருமணத்தில், பிரேம்ஜியும் இந்துவும் பாடிய நிலையில், தம்பியின் திருமணத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் பாடியிருக்கிறார். அப்படி என்ன பாடியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

Advertisment

பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முக ஆளுமையான கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. முரட்டு சிங்கிளாக வலம் வந்த அவரிடம், பேட்டிகளில் பெரும்பாலும் அவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியே கேட்கப்பட்டது.

இந்நிலையில் பிரேம்ஜிக்கும் இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணி முருகன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற்றது.

Advertisment
Advertisements

திருமண நிகழ்ச்சியில் பிரேம்ஜியும் அவருடைய மனைவி இந்துவும் சேர்ந்து இளையராஜா இசையமைத்த “நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம்” என்ற பாடலை பாடி இருக்கிறார்கள். 

பிரேம்ஜியும் அவரது மனைவியும் பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபுவும் தனது தம்பி பிரேம்ஜியின் திருமணத்தில் பாடல் பாடி இருக்கிறார். வெங்கட் பிரபு பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜா இசையமைத்த, “அடி ஆத்தா ஆத்தோரமா வாரியா, என்ன பார்த்தும் பார்க்காமலே போறீயா” என்ற  பாடலை வெங்கட் பிரபு பாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Venkat Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: