மறக்க முடியாத நடிகர் வீட்டில் சிம்பிளாக நடந்த முக்கிய விழா!

வில்லனாக தோன்றிய வெண்ணிற ஆடை மூர்த்தி நடிப்பை அன்றைய கலைஞர்கள்

பழம் பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது 80 ஆவது பிறந்த நாளை வீட்டில் மிகவும் எளிமையாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர்களை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. பேச்சு வழக்கில் அவர்கள் செய்த காமெடிகள்,கருத்துகள், இலைமறை காயான இரட்டை வசன காமெடிகள் போன்றவை தான் இன்றைய காமெடி நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்கள்.

அந்த வகையில் உடல் பாவனை, பக் பக் வாய் அசவு மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த பழம் பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது 80 ஆவது பிறந்தநாளை மனைவியுடன் எளிமையாக வீட்டில் கொண்டாடினார். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் காலம் கடந்தும் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் வெண்ணிற ஆடை மூர்த்தியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர், உடல் நிலை குறைவு காரணமாக படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் போன்ற திரைப்படங்களில் வில்லனாக தோன்றிய வெண்ணிற ஆடை மூர்த்தி நடிப்பை அன்றைய கலைஞர்கள் பலர் வியந்து பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில், தனது மனைவியுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி எளிமையாக கொண்டாடிய பிறந்த நாள் விழாவிற்கு சச்சு போன்ற மூத்த நடிகர்கள் பலர் கலந்துக் கொண்டு அவரிடம் ஆசி பெற்றன.

×Close
×Close