/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1227.jpg)
verithanam bigil vijay sung atlee ar rahman - வெறித்தன விஜய் ரசிகர்களுக்கு, வெறித்தன பிகில் அப்டேட்ஸ்! ரஹ்மான் இசையில் முதன் முதலில் விஜய் வாய்ஸ்!
அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இதில், நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நயன்தாரா, யோகி பாபு, விவேக், சிந்துஜா, 'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் 'வெறித்தனம்' என்ற பாடலை பாட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று, தயாரிப்பாளர் தரப்பு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. விவேக் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்பாடலை விஜய் பாடுகிறார்.
A big thank you to our #Thalapathy from all of us (His fans) for granting our request to sing in this album Trust me the song is #Verithanam Thank you @arrahman Sir, @Atlee_dir@Lyricist_Vivek for making this happen @SonyMusicSouth#Bigilpic.twitter.com/WAZbT3eFos
— Archana Kalpathi (@archanakalpathi) 8 July 2019
தவிர, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் முதன் முதலாக பாடியிருக்கும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 'பிகில்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றிருந்தது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us