/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1853.jpg)
Verithanam song released vijay bigil atlee ar rahman - விஜய் குரலில் வெளியான 'வெறித்தனம்' லிரிக் பாடல்! ரசிகர்களை கவர்ந்ததா?
அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அவருடன் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ரூபன் எடிட் செய்ய, விஷ்னு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் தாதாவாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என்று பிகில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் பாடியிருக்கும் 'வெறித்தனம்' பாடல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விஜய், நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்…இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா உலாத்தனும் என்று தொடங்கும் இந்தப் பாடலை விஜய் தனது ஸ்டைலில் பாடி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.