Thalapathy Vijay: தொடர்ந்து 4-வது நாளாக ’வெறித்தனம்’ பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதோடு 10 மில்லியன் பார்வையாளர்களையும் இப்பாடல் கடந்துள்ளது.
Thalapathy Vijay: தொடர்ந்து 4-வது நாளாக ’வெறித்தனம்’ பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதோடு 10 மில்லியன் பார்வையாளர்களையும் இப்பாடல் கடந்துள்ளது.
Bigil - Verithanam Song: நடிகர் விஜய், நடனம், பாடல், காமெடி, ஆக்ஷன் என பல வெரைட்டிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தற்போது ‘பிகில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.
Advertisment
பாடலாசிரியர் விவேக் எழுதிருக்கும் இப்பாடலுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல், சர்கார் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்த போதே, அவரின் இசையில் விஜய் ஒரு பாடலை பாட மாட்டாரா என ஏங்கினார்கள் ரசிகர்கள். சர்கார் படத்தில் ஒரு பாடலை பாட சொல்லி தான் கேட்டதாகவும் அதற்கு விஜய் மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரஹ்மான்.
இந்நிலையில், அட்லி இயக்கும் ’பிகில்’ படத்தில் மீண்டும் விஜய் - ரஹ்மான் கூட்டணி இணைந்தது. இந்தப் படத்தில் விஜய் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, “வெறித்தனம்” என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அந்தப் பாடல் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியானது. பெப்பியான இந்தப் பாடலை படு லோக்கலாகப் பாடியிருக்கிறார் விஜய். பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே யூ ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 4-வது நாளாக ’வெறித்தனம்’ பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதோடு 10 மில்லியன் பார்வையாளர்களையும் இப்பாடல் கடந்துள்ளது.
Advertisment
Advertisements
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.