scorecardresearch

மூத்த நடிகர் சரத் பாபு மரணம்: திரை உலகினர் அதிர்ச்சி

மூத்த நடிகர் சரத் பாபு இன்று மரணம் அடைந்தார்.

Veteran actor Sarath Babu passes away at 71
மூத்த நடிகர் சரத் பாபு காலமானார்.

மூத்த நடிகர் சரத்பாபு வயது தொடர்பான பிரச்னைகளுக்காக இம்மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, மே 3ஆம் தேதியன்று, அவரது மறைவு குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. ரசிகர்களும் பிரபலங்களும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சரத்பாபுவின் சகோதரி அவர் மரணம் குறித்த வதந்திகளை மறுத்து, அவர் குணமடைந்து வருவதாகக் கூறினார். இந்த சமூக வலைதள செய்திகள நம்பி இரங்கல் தெரிவித்த நபர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.
பின்னர் அவர் தனது ட்வீட்டை நீக்கினார். சரத் பாபு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத் பாபு, 1973 இல் சினிமாவில் அறிமுகமானார். எனினும், இவர் 1978-ல் கே பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
ஆந்திராவின் மாநில நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். சரத் கடைசியாக இந்த ஆண்டு மல்லி பெல்லி படத்தில் நடித்தார். இது மட்டுமின்றி சரத் பாபு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Veteran actor sarath babu passes away at 71