இந்தியா சினிமாவில் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது சினிமா அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
1955-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாசா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சரோஜா தேவி. அதன்பிறகு ஒரு சில மலையாள படங்களில் நடித்த இவர், 1956-ம் ஆண்டு ஜெமினிகனேசன் சாவித்ரி இணைந்து நடித்த திருமணம் என்று படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சரோஜா தேவிக்கு ஆரம்ப கட்டத்தில் புதுமுகம் என்றதால் தனக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. அநெ்த சமயத்தில் எம்.ஜிஆர் தான் அவரது படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.
1955-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் 4 வருடங்களுக்கு பிறகே சரோஜா தேவி நாயகியாக நடித்தார். தமிழில் அவர் நாயகியாக நடித்த முதல் படம் கல்யாண பரிசு. இந்த படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சரோஜா தேவிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று தந்நதது.
தொடர்ந்து சிவாஜியுடன் இரும்புத்திரை படத்தில் நடித்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்திருந்தார். தான் அறிமுகமான காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருந்தபோது எனக்கு கண்ணாடி கிழித்து காலில் ரத்தம் வந்துவிட்டது. அதை சொன்னால் எதாவது சொல்வார்கள் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் எம்.ஜி.ஆர் அதை பார்த்துவிட்டார். என்னை அழைத்து என் காலை அவரது மடியில் வைத்து எனக்கு முதலுதவி செய்தார். நான் பெரிய நடிகையாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சின்ன நடிகைக்கு எம்.ஜி.ஆர் அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனாலும் அவர் செய்தார். அதன்பிறகு அவரது படங்களில் எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். திரைத்துறையில் எனது வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்.தான் முக்கிய காரணம் என்று சரோஜா தேவி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த சரோஜா தேவி மலையாளத்தில் நடிக்கவில்லை. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், மலையாளத்தில் ட்ரெஸ் எனக்கு செட் ஆகவில்லை. அங்கு ஜாக்கெட் இல்லாமல் புடவையை மட்டும் சுற்றிக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
திரைத்துறையில் பலர் என்னிட்டம் காதலை சொல்லியிருந்தாலும் நான் யாரையும் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் என் குடும்பம் தான். நான் திரைத்துறைக்கு வரும்போதே என் அம்மா சொன்னார். இப்படி ஏதாவது நடந்தால் எனக்கு கல்யாணமே இல்லை. இப்படியேதான் இருக்க வேண்டும். நீ எதாவது இப்படி செய்தால் உன் பின்னால் உள்ள தங்கைகளுக்கு அது பாதிப்பாக அமையும் என்று சொன்னார். அதனால் நான் எதையும் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“