திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த மூத்த கன்னட நடிகர் எஸ்.சிவராம், சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 83.
மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.லட்சுமிஷ், “எனது தந்தை சிவராம் இப்போது எங்களுடன் இல்லை. பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவர் குணமடைய தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக விதி அதன் திட்டத்தைக் கொண்டிருந்தது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
ஜனவரி 28, 1938 இல் தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சிவராமண்ணா என்று அழைக்கப்படும் சிவராம், திரைப்படங்களை இயக்குவது மற்றும் தயாரிப்பது மட்டுமின்றி 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகன் முதல் துணைக் கதாபாத்திரம் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
1965 இல் பெரத்தா ஜீவாவுடன் தனது நடிப்பைத் தொடங்கிய சிவராம், துட்டே தொட்டப்பா மற்றும் லக்ன பத்ரிகே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
பின்னர் நாகரஹாவு, நானோப்பா கல்லா, யஜமானா, அப்தமித்ரா மற்றும் ஹோம்பிசிலு ஆகிய படங்களில் நடித்ததற்காக சிவராம் பாராட்டப்பட்டார்.
சிவராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தர்மதுரை படத்திலும் நடித்துள்ளார்.
சிவராம் ராஷி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தனது உடன்பிறந்தவர் எஸ் ராமநாதனுடன் இணைந்து தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் கெஜ்ஜே பூஜை மற்றும் உபாசனே போன்ற சில வெற்றித் திரைப்படங்களை தயாரித்தார்.
திரைத்துறையில் சுறுசுறுப்பாக இருந்த வந்த சிவராம் சமீபத்தில் சினேகிதா என்ற படத்தில் நடித்தார்.
சிவராமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ட்விட்டரில், “கன்னட சினிமாவின் மூத்த நடிகர் மறைந்தார் என்ற செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
சிவராமின் மறைவில் கர்நாடகா ஒரு மூத்த கலைஞரை இழந்துவிட்டதாக எடியூரப்பா கூறினார். சிவராம் உடனான தனது பல சந்திப்புகளை நினைவுகூர்ந்த எடியூரப்பா, சிவராமின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தார். அவரது மறைவுக்கு கர்நாடக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கன்னட திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil