நர்சிங் யாதவ், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற தெலுங்கு வில்லன் நடிகர். தமிழில் விஜய்யின் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலின் பூஜை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நர்சிங் யாதவ் நேற்று மாலை தன் வீட்டில் திடீர் என்று மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நர்சிங்கை அவரின் மனைவி சித்ரா யாதவ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அங்கு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார்.
தமன்னாவுக்கு சவாலாக அமைந்த டிஜிட்டல் ஒர்க் அவுட் - வீடியோ
தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் நர்சிங் தன் வீட்டு மாடியில் இருந்து விழுந்து தலையில் அடிப்பட்டு சுயநினைவை இழந்ததாக தகவல் வெளியானது.
அந்த தகவலில் உண்மை இல்லை என்று சித்ரா மறுத்துள்ளார். மேலும் இது போன்ற நேரத்தில் ஆதாரமில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நர்சிங் யாதவ் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு சித்ரா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது கணவர் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வழக்கமான முறையில் டயாலிசிஸ் எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சிரீஸ்: இரண்டாம் பாகம் உருவாகிறதா?
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பல படங்களில் நர்சிங் யாதவ் நடித்திருக்கிறார். சிரஞ்சீவியின் கம்பேக் படமான 'கைதி எண் 150'-ல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் தாதா எம்பிபிஎஸ், ரேஸ் குர்ரம் ஆகிய படங்களும் இவரது ஹிட் லிஸ்டில் அடங்கும்.
விஜய நிர்மலா இயக்கிய ஹேமா ஹேமீலு படம் தான் நர்சிங் யாதவ்வின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.