சென்னையில் இயக்கும் பிரபல தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் சந்திப்பு குறித்து பதிவிட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் உரைய வைத்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ள வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷிடம் விஜய் தனது அடுத்தப் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த ராகேஷின் ட்வீட் வைரலாகி வருகிறது.
தெறி, மெர்சல் திரைப்படங்களுக்கு பிறகு தற்போது விஜய் மூன்றாவதாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தியேட்டர் உரிமையாளருடன் நடிகர் விஜய் சந்திப்பு
விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளிவந்துவிட கூடாது என்று படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய்யை சந்தித்து பேசியது குறித்து பதிவிட்டுள்ளார்.
March 2019
அதில் விஜய் தனக்கு கிரீன் டீ தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ள ராகேஷ், அவரிடம் அடுத்த படம் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
March 2019
இப்படி வரிசையாக விஜய்யை பற்றி அவர் புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்கள் அனைவருக்கும் ஜில்லுனு ஒரு கிலோ ஐஸ் எடுத்து தலையின் மேல் வைத்தது போல் இருக்கிறது.