சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க விருப்பமே இல்ல; உண்மையை உடைத்த வெற்றி வசந்த்: காரணம் தான் ஹைலைட்!

வெற்றி வசந்த் தனது திரைப் பயணத்தின் ஆரம்ப காலங்களில் சந்தித்த சிரமங்கள், சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்த கஷ்டம் மற்றும் சீரியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

வெற்றி வசந்த் தனது திரைப் பயணத்தின் ஆரம்ப காலங்களில் சந்தித்த சிரமங்கள், சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்த கஷ்டம் மற்றும் சீரியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
siragadikka aasai

'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் வெற்றி வசந்த், கலாட்டா தமிழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் தனது ஆரம்ப காலப் போராட்டங்கள் மற்றும் சீரியல் துறைக்குள் நுழைந்தது குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சினிமா நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த தனக்கு, சீரியலில் நடிக்க முதலில் விருப்பமே இல்லை என்ற உண்மையை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். வெற்றி, தனது தந்தை ஒரு அரசு ஊழியர் என்றும், தாய் தையல் வேலை செய்து குடும்பத்துக்கு உதவியதாகவும் இந்நிலையில் தனது சினிமா மீது கொண்ட ஆசை பற்றியும் கூறியுள்ளார். 

Advertisment

வெற்றி வசந்த் சீரியல் துறையில் நுழைந்தது தனக்கு விருப்பமில்லாத ஒன்று என்றும், தனது இலக்கு எப்போதும் சினிமா மட்டும்தான் என்றும் வெளிப்படையாகக் கூறினார். தனது கனவு சினிமாவை நோக்கி மட்டுமே இருந்ததாகவும், சீரியலில் நடிக்கத் தான் விரும்பியதில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், 'சிறகடிக்க ஆசை' சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும், பெரும் வெற்றியையும் தேடித் தந்தது.

வெற்றி வசந்திற்கு சீரியலில் நடிக்க விருப்பம் இல்லை என்ற ரகசியம் இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது தெரியவந்துள்ளது. ஒரு நல்ல திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வெற்றி வசந்த் சீரியலில் நடிக்கத் தொடங்கியதாகவும், இதற்கு அவரது நண்பன் அளித்த ஊக்கமே முக்கிய காரணம் என்றும் வெற்றி கூறுகிறார். அவரது நண்பர், சீரியல் நடிப்பு ஒரு பெரிய திரைப்பட வாய்ப்புக்கான வழியைத் திறந்துவிடும் என்று கூறியதாகவும் வெற்றி தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

நடிகர் வெற்றி வசந்த்தை சின்னத்திரை விஜய் சேதுபதி என்று சிலர் ஒப்பிடுவதை அவரது நண்பர் மறுத்துப் பேசியுள்ளார். ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தன்மை இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களைப் போல நடித்தால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என்றும் அவர் கூறினார். பிடிக்காமல் சினிமா வாய்ப்புக்காக சீரியலில் நடித்தாலும் வெற்றி வசந்தின் முத்து கதாப்பாத்திரம் பலருக்கும் பிடித்த ஒன்றாகும். மேலும் இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர். 

Entertainment News Tamil Siragadikka Aasai Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: