'பணம் வேணாம்'... சிம்பு படத்துக்கு தனுஷ் சொன்ன விஷயம்: வெற்றிமாறன் விளக்கம்

யூடியூபில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக க்ராஸ் ரூட் ஃபிளிம் கம்பெனி யூடியூப் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

யூடியூபில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக க்ராஸ் ரூட் ஃபிளிம் கம்பெனி யூடியூப் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vetrimaran

இயக்குனர் வெற்றிமாறன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து தனது யூடியூப் பக்கமான க்ராஸ் ரூட் ஃபிளிம் கம்பெனி யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சினிமா வட்டாரத்தில் சிம்புவை வைத்து வெற்றி மாறன் வட சென்னை 2 படத்தை எடுத்து வருகிறார் என்றும் அதற்காக தனுஷ் என்.ஓ.சி தர 20 கோடி வரை பணம் கேட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. 

Advertisment

பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசும் போது வட சென்னை 2 தான் அடுத்து நான் நடிக்கப் போகிறது என்று கூறி இருந்தார்.

ஆனால் இயக்குனர் வெற்றி மாறன் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் சிம்புவை வைத்து வட சென்னை 2 படத்தை இயக்குகிறார் என்ற தகவல்கள் பரவி வந்தது. தனுஷுக்கு வெற்றிமாறன் இயக்கிய ஒவ்வொரு படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு வடசென்னை 2 குறித்தும் இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். 

க்ராஸ் ரூட் ஃபிளிம் கம்பெனி யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவில் வெற்றிமாறன் பேசுகையில், “நான் வாடிவாசல் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் அதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் தாணு சார் நீங்க சிம்புவுடன் படம் பண்ணுறீங்களா என்று கேட்டார். அதே போல சிம்பு ஏற்கனவே ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் ஆகி இருந்தது.  

Advertisment
Advertisements

எல்லா பிரச்சனைகளும் சரியான புள்ளியில் வந்து அமைய இந்த படத்தை இப்போது ஆரம்பித்துள்ளோம்” என்று வெற்றிமாறன் கூறினார். ஆனால் ”சிம்புவை வைத்து ஸ்டாண்ட் அலோன் படம் பண்ணலாமா? அல்லது வடசென்னை யூனிவர்சில் படம் பண்ணலாமா? என்று வடசென்னை உலகின் மொத்த உரிமையும் வைத்திருக்கிற தனுஷிடம் பேசினேன். அவர் உங்களுக்கு கிரியேட்டிவ்வாக எது சரியாகும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்”.

”வடசென்னை உலகம் படத்தை மையப்படுத்திய படமாக எடுத்து வரும் படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி கொடுக்க பணம் கேட்டார் என்று சிலர் யூடியூப் சேனல்களில் தவறாக பேசி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. தாராளமாக வட சென்னை உலகில் படம் பண்ணுங்க என்றும், எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனக்கும் தனுஷுக்கும் உள்ள பழக்கம் பொல்லாதவன் படத்தில் இருந்து இல்லை பாலு மகேந்திரா இயக்கத்தில் அது "ஒரு கனாக்காலம்" படத்தில் உதவி இயக்குனராக நான் பணியாற்றும் போதிலிருந்து எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது.

தனுஷ் என்னுடைய நல்லதுக்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு படத்துக்காக எங்களுடைய நட்பு எந்த வகையிலும் கெட்டுப் போகாது. சில நாட்களுக்கு முன்பு சிம்பு வந்து என்னை சந்தித்தார் இப்படி எல்லாம் பேசுறாங்க, தனுஷுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு என்னால் கெட்டுப் போய் விடக்கூடாது நீங்க ஸ்டாண்ட் அலோன் படம் கொடுத்தால் கூட நான் அதில் நடிக்க ரெடி என்று சொன்னார். அவரிடமும் நடந்ததை சொல்லிவிட்டேன். சீக்கிரமாக இந்த படத்தை ஆரம்பித்து நல்லபடியாக முடித்து கொடுப்பேன்” என்று பேசி பலரின் விமர்சனங்களுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Dhanush Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: