vetrimaaran on caste certificate | Indian Express Tamil

‘சாதி சாராதவர் என சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள்’: வெற்றிமாறன் புகார்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி கேட்கக் கூடாது என்றும் சாதியை வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை தவிர்ப்பதற்கான வழிமுறை இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

‘சாதி சாராதவர் என சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள்’: வெற்றிமாறன் புகார்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி கேட்கக் கூடாது என்றும் சாதியை வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை தவிர்ப்பதற்கான வழிமுறை இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது பின்வருமாறு : ”முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில் என்னை பேச சொல்லியிருக்கிறார்கள். ” நான் எப்படியாவது இஞ்சினியர் ஆக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசை. இப்போது இஞ்சினியர் ஆவது மிகவும் எளிது. ஆனால் நாங்கள் படிக்கும்போது அப்படி  அல்ல. அந்த காலத்தில் 1,100-மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினால் நீங்கள் டாக்டர் படிப்பு கிடைக்கும் . 1000 முதல் 1100 வரை வாங்கினால் இஞ்சினியர் படிப்பு கிடைக்கும் ”என்று கூறினார்.

மேலும் மாணவர்கள் கேள்விக்கு அவர் விடையளித்தார். “ அரசாங்கம் சாதி வேண்டாம் என்று சொல்கிறது. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சாதி கேட்கப்படுகிறது” என்ற ஒரு மாணவர் கேட்டர்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன்” எனது குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது, சாதி குறிப்பிட முடியாது என்று கூறினேன். இதற்காக நீதிமன்றம் வரை சென்றேன். ஆனால் இந்துவிற்கு கீழ் உங்கள் சாதியை குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று நீதிமன்றமே கூறியது. இதனால் சாதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டாம். ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட சாதி சான்றிதழ் தேவை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி கேட்டக கூடாது. மேலும் சாதி சான்றிதழ் தேவையில்லை என்று நினைக்கிறேன்” .

”வன்முறையை சினிமாவில் காண்பிக்கும்போது, கவனமாகத்தான் கையாள வேண்டும். வன்முறையை கொண்டாட்டமாக காண்பிக்கக்கூடாது. ஒருவர் 50 பேரை அடிப்பதுபோல இருக்கக்கூடாது. எனது படங்களில் வன்முறை இருக்கிறது. ஆனால் அது அந்த கதாபாத்திரத்தின் மனநிலையை மற்றும் வலியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விசாரணை படத்தை எனது குழந்தைகளை பார்க்க வேண்டாம் என்றுதான் கூறினேன். இளம் தலைமுறையினர் நன்மைகளை செய்தார், போராடினால் சமூக மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை ’விசாரணை’ படம் தரவில்லை என்பதால் குழந்தைகளை படம் பார்க்க வேண்டும் என்று கூறினேன்” என்று கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vetrimaaran on caste certificate