Advertisment

பல நட்சத்திரங்கள் திறமையை தான் பார்க்கிறார்கள்: கதையை பார்ப்பதில்லை; இயக்குனர் வெற்றிமாறன்!

வெற்றி மாறன், பா ரஞ்சித் மற்றும் மகேஷ் நாராயணன் போன்ற இயக்குனர்கள் மம்முட்டி மற்றும் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நடிப்பில் உருவான படங்களில் நடிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vetrimaran Ranjith rajini

இந்திய சினிமாவில், பல சூப்பர் ஸ்டார்கள் வெவ்வேறு வகையான படங்களை உருவாக்கும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் திறமையை விரும்புகிறார்களே தவிர கதையை அல்ல என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

Advertisment

Read In English: Vetrimaaran on Rajinikanth working with Pa Ranjith: ‘Unlike him, many stars only want the talent, not the narrative’

ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தாக்க இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் பா.ரஞ்சித். கபாலி படத்தை இயக்குவதற்கு முன்னதாக அவர், அட்டக்கத்தி மெட்ராஜ் என இரு படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். கபாலி படம் அவருக்கு 3-வது படம். அதேபோல், அதற்கு முன்பு, புதிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்காத ரஜினிகாந்த், முதல்முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன்னதாக அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர்.சி அதற்கு முன்னதாக 4 படங்களை இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் அவருக்கு 5-வதுர் படம். இதுவே ரஜினிகாந்த் புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடித்த முதல் படம். அந்த சாதனையை கபாலி படத்தின் மூலம் பா.ரஞ்சித் முறியடித்தார். கபாலி படம் பா.ரஞ்சித் இந்திய சினிமாவில் ஒரு சிறந்த பெயராக மாறுவதற்கு வழி வகுத்தது.

மேலும் இந்த படத்தின் மூலம ரஜினிகாந்த் படத்தை இயக்குனர் இளம் இயக்குனர்களுக்கு ஒரு கனவாக இருக்காது என்பதை பலருக்கும் உணர்த்தியது. இது குறித்து தற்போது இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன், ரஞ்சித், கரண் ஜோஹர், ஜோயா அக்தர் மற்றும் மகேஷ் நாராயணன் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர், பங்கேற்ற, தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா குறித்த சமீபத்திய வட்டமேசை உரையாடலில், 'வித்தியாசமான' படங்களில் பணியாற்றும் பெரிய நட்சத்திரங்கள் பற்றிய தலைப்பு குறித்து இயக்குனர் வெற்றிமாறன் எளிமையாக கூறினார். ,

"ரஜினிகாந்த் ரஞ்சித் படத்தை இயக்க அழைத்தார், இதன் மூலம் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் காலத்தை புரிந்துகொண்டிருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். அதே சமயம் “இந்தி சினிமாவிலும், பல சூப்பர் ஸ்டார்கள் வெவ்வேறு வகையான படங்களை உருவாக்கும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் திறமையை விரும்புகிறார்களே தவிர கதையை அல்ல என்று கூறிய வெற்றி மாறன், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி போன்றவர்கள் இளம் இயக்குனர்களுக்கு கடிவாளத்தை வழங்குவதற்கான நோக்கத்தை நிரூபித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த சூப்பர் ஸ்டார்களின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய, திரைப்பட இயக்குனரும், எடிட்டருமான மகேஷ் நாராயணன், "மம்முட்டி காதல் தி கோர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அந்த படங்களை வெளியிட்டும் இருக்கிறார். இந்த பட்டியலில் பிரம்மயுகம் ஒரு பயங்கரமான தேர்வு என்பதை ரஞ்சித் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய மகேஷ் நாராயணன், “நட்சத்திரங்களின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் வசூல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது தான்.

அதே சமயம் இதையெல்லாம் மம்முட்டி பொருட்படுத்துவதில்லை. கேரக்டர் எவ்வளவு நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் முக்கியம். அமிதாப் பச்சன் மற்றும் மம்முட்டி போன்றவர்களை கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள். அதனால் இப்போது அவர்கள் புதியதை தேடுகிறார்கள். அந்த ஆய்வு மூத்த நடிகர்களிடம் இருந்து வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மகேஷ் நாராயணனின் கருத்தை ஒப்புக்கொண்ட வெற்றிமாறன், லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட படங்களை மம்முட்டி ஆதரிப்பதாக சுட்டிக்காட்டினார். "அவர்கள் இளையவர்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். ஏதாவது ஒரு முன்னுரிமை இருந்தால் மட்டுமே சினிமாவில் இதுபோன்ற படங்கள் தொடரும் என்று கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vetrimaaran Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment