Advertisment

கடன் வாங்கி திரும்ப கொடுக்காத அஜித்... கமல் பட தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு

அஜீத் தனது பெற்றோரின் பயணத் திட்டங்களுக்கு பணம் கேட்டு தன்னை அணுகியதாகவும், தான் சினிமாவில் புகழ் பெற்றவுடன் தனது படத்தில் நடிப்பதாகவும் உறுதியளித்ததாக மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Manicam

நடிகர் அஜித் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்ளவில்லை என்று வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் அஜித் தனது தயாரிப்பில் நடிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்ற தவறிவிட்டார் என்று  செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான மாணிக்கம் நாராயணன் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  

Advertisment

1993-ம் ஆண்டு வெளியான புதிய தென்றல் என்ற படததின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானர் மாணிக்கம் நாராயணன். அதனைத் தொடர்ந்து கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சில படங்களை தாயரித்துள்ளார். கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வித்தகன் படத்தை தயாரித்திருந்தார். பல படங்களை விநியோகம் செய்துள்ளார் மாணிக்கம் நாராயணன்.

இதில் கடந்த 2006-ம் இவர் தயாரிப்பில் கௌதம்மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், படத்தின் நாயகன் கமல்ஹாசனுக்கு முக்கிய படமாக அமைந்தது. தற்போது இந்த படம் 17 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் மாணிக்கம் நாராயணன் பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் நடிகர் அஜித் குறித்து இவர் கூறிய கருத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது 1995-96ல் நடந்தது. அஜீத் தனது பெற்றோரின் பயணத் திட்டத்திற்காக கொஞ்சம் பணம் கேட்டு என்னை சந்தித்தார். நடிகராகப் புகழ் பெற்றவுடன், எனக்கு படம் செய்து தருவதாக உறுதி அளித்து, இப்போது வாங்கும் தொகையை தனது சம்பளத்தில் சரிசெய்து கொள்வதாக உறுதியளித்தார். அவருடைய வார்த்தையை நம்பி, நான் சம்மதித்து, அவர் கேட்ட பணத்தை உடனடியாக கொடுத்தேன்.

ஆனால் அவர் இன்றுவரை எனது தயாரிப்பில் நடிக்கிறேன் என்று சொன்ன வாக்கை நிறைவேற்றவில்லை. வாங்கிய பணத்தையும்  திருப்பித் தரவில்லை. அவருக்கு சினிமாவில் நடிக்காமல் வாழ்க்கையில் மட்டும் நடிக்கத் தெரியும். அவர் என்னிடம் கடன் வாங்கியிருந்தால், அந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். தன்னை ஒரு ஜென்டில்மேன் என்று முத்திரை குத்திக் கொண்டாலும், அவருடைய செயல்கள் அந்தப் பட்டத்துடன் ஒத்துப்போவதில்லை. இது வெறுமனே தனக்காக வார்த்தையாக இல்லாமல், தன்னைப் பிரகடனப்படுத்துவதை விட உண்மையான ஜென்டில்மேன் குணங்கள் மற்றவர்களால் உணரப்பட வேண்டும், ”என்று நாராயணன் கூறியுள்ளர்ர்.

மேலும் என்னிடம் கடன் வாங்கியதற்காக அஜித்தை விமர்சிப்பதல்ல எனது நோக்கம். அவர் என்னிடமிருந்து கடன் வாங்கினார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள மறுப்பதும், அதைப் பற்றி என்னுடன் பேச விரும்பாததும் தான் எனக்கு இருக்கும் முக்கியமான கவலை என்று கூறியுள்ள மாணிக்கம் நாராயணன், அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகருமான ஷாலினி ஒரு காலத்தில் தனது நல்ல தோழியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஒரு நல்ல குடும்பம் மற்றும் ஒரு படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அப்படியானால் ஏன் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும்? அவர் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன் குணங்களை நிலைநிறுத்துகிறார் என்றால், ஏ.எம்.ரத்னம் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏன் உதவக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத் குமார் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்து திரையுலகில் உள்ள ஒரே நபர் மாணிக்கம் நாராயணன் மட்டுமே.

பல ஆண்டுகளாக நாராயணன் இந்தக் குற்றச்சாட்டுகளை பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னாலும், அஜித் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அதேபோல் அஜித்தின் அடுத்து படத்தை இயக்க உள்ள இயக்குனர் மகிழ் திருமேனியின் முதல் படமாக முந்தினம் பார்த்தேனே (2010) என்ற திரைப்படத்தை வாங்கச் செய்து "தனது பணத்தை வீணடித்ததாக கூறியுள்ள மாணிக்கம் நாராயணன், “படத்தின் படப்பிடிப்பை முடிக்க 110 நாட்கள் ஆனது. 1 கோடி பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடிப்பேன் என்று மகிழ் திருமேனி கூறியிருந்தார். ஆனால் படத்திற்கு 3.45 கோடி செலவழித்து முடித்தேன் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment