Advertisment

தலைவர் நிரந்தரம் ஏன் தெரியுமா? வேட்டையன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார்

author-image
WebDesk
New Update
Rajinikanth Vettaiyan

வேட்டையன் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது, இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்ககளை கமிட் செய்து வரும நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் விருந்தாக, வேட்டையன் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

2024-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று வேட்டையன். டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தென மாவட்டங்களில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரஜினிகாந்த் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, வேட்டையன்  படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டர், ரஜினியை உச்சியில் கட்டளையிடும் நபராகவும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலும், கண்ணாடி அணிந்தபடியும் காட்சியளிக்கிறார்.

அதே போஸ்டரில் கீழே உள்ள படத்தில், மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சிக்கு மேல், ரஜினி துப்பாக்கியை மேல்நோக்கிச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம், அதே சமயம், "ஹூக்கும்" கொடுப்பது போல், ஜெயிலர் பாடல் ஏன் "தலைவர் நிரந்தரம்" என்பதை சரியாக வலியுறுத்தியது போன்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், எமோஜிகளை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, வேட்டையன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தில் ரஜினி எப்போதும் போல உற்சாகமாக படப்பிடிப்பிற்கு தயாராகி கொண்டிருந்தார். பச்சை நிறக் கோடு போட்ட சட்டை, க்ரீம் பேன்ட், பிரவுன் ஷூக்கள், கருப்பு நிற ஷூக்கள் மற்றும் அவரது கையெழுத்துப் புன்னகையுடன், ரஜினி தனது குழுவினர் அருகில் நின்றபடி தயாரிப்புகளுக்கு மத்தியில் பிடிக்கப்பட்டார்.

இந்த படத்தின் அமிதாப் பச்சன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் ஆகிய இருவரும் 33 வருடங்களுக்கு முன்பு, முகுல் எஸ் ஆனந்தின் இயக்கத்தில் வெளியான ஹம் (1991) என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இந்த படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த காட்சியின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.

இந்த படம் தமிழ் பதிப்பைத் தவிர, இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் அல்லிராஜாவால் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment