/indian-express-tamil/media/media_files/CfMbn9F2PA3M9I6qtghU.jpg)
'வேட்டையன்' திரைப்படம் நவம்பர் 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான படம் 'வேட்டையன்'. ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படத்தில், அனிருத் இசையமைத்த 'மனசிலாயோ' பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.
இதனையடுத்து, 'வேட்டையன்' படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், 'வேட்டையன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 8 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.