Ajith’s Starrer Viswasam 2nd Single Track Releasing: அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10ம் தேதி வெளியானது. இமான் பாடிய அந்தப் பாடல் ஐந்தே நாளில் 9 மில்லியன் வியூஸ்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மாஸ் குத்தாக வெளியான அந்தப் பாடலைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் டிராக்காக ‘வேட்டிக் கட்டு’ எனும் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
The second single of #Viswasam #VettiKattu sung by @Shankar_Live will be released by @LahariMusic at 7pm today.#Viswasam2ndSingle@directorsiva @SureshChandraa @vetrivisuals @AntonyLRuben @immancomposer @dhilipaction @kjr_studios @AandPgroups @DoneChannel1 pic.twitter.com/XNu8S2dlaa
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) 15 December 2018
இன்று இரவு 7 மணிக்கு ‘வேட்டிக் கட்டு’ சிங்கிள் டிராக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபில்ம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இமான் இசையில் ஷங்கர் மகாதேவன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், சரியாக 7 மண்ணில் மற்றொரு குத்தாட்ட ட்ரீட்டாக வேட்டிக்கட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் #VettiKattu ஹேஷ்டேக் டிரென்டிங்கில் முதலிடத்தில் நடை போடுகிறது.