நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியாகியது விவசாயம்,குடும்ப உறவு என குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/h1-7.jpg)
படத்தை பார்த்த ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். திரையரங்களில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு "சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்" என்று ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/h1-6.jpg)
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி "நம் நாட்டு மரபு, குடும்ப உறவுகள், விவசாயம் இவைதான் காலத்துக்கும் இந்த சமுதாயத்தை காக்கும் என்பதை போற்றும் திரைப்படமாக கடைக்குட்டி சிங்கம் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டி பாராட்டிய உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று ட்வீட்டரில் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் அண்ணனுமாகிய நடிகர் சூர்யா துணை ஜனாதிபதியின் பாராட்டுக்கு நன்றி கூறியுள்ளார். படக்குழுவின் சார்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பாராட்டுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சூர்யா கூறியுள்ளார். மேலும் படத்தை பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து உள்ளார்.