/indian-express-tamil/media/media_files/x1wVb1lYwY09FSXmCgpW.jpg)
விசித்ராவுக்கு பிரமாண்ட வரவேற்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 97-வது நாளில் வெளியேறிய விசித்ராவுக்கு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்த வீடியொ வைரலாகி வருகிறது. நடிகைகள் பலரும் அவருடைய வீட்டுக்கு போய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இறுதி வாரத்தில் உள்ளது. 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக சுற்றிய பணப்பெட்டியில் 16 லட்சம் வந்ததும் அதை எடுத்துக்கொண்டு பூர்ணிமா கிளம்பிவிட்டார். அடுத்து விசித்ரா எலிமேனேஷன் செய்யப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் மாயா, விஷ்ணு, மணி, அர்ச்சனா, விஜய் வர்மா, தினேஷ் ஆகிய 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
#Vichithra welcome Back lovely god bless u ❤️❤️❤️😍 Real winner of #bigbosstamil7#Vichitrra#BiggBossTamil7#BiggBoss7Tamil#BiggBoss7Tamilpic.twitter.com/4uohA6YgEu
— strong womens supporters🔥🔥🔥💃🏻💃🏻💃🏻💃🏻💃 (@Lotus01051987) January 7, 2024
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்கள் பலரும் சில வாரங்களிலேயே எலிமினேஷன் ஆகி வெளியேறிய நிலையில், சீனியரான விசித்ரா ரசிகர்களின் பேராதரவுடன் 97 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை நிரூபித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு சென்ற விசித்ராவுக்கு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
விசித்ராவிற்கு வாழ்த்து கூறுவதற்காக நடிகைகள் பலர் அவருடைய வீட்டிற்கு போய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்சியின் டைட்டில் வின்னர் அசீம் மற்றும் சில நடிகைகள் விசித்ராவை வரவேற்று உள்ளனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் விசித்ராவை வரவேற்பதற்காக நடிகை அம்மு ராமச்சந்திரன், ரித்விகா போன்ற நடிகைகள் விசித்ராவின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.
Welcome Back dear Lion Lady♥️ #Vichithra#Vichumapic.twitter.com/dnxprW2wNb
— Ammu Ramachandran (@Actress_Ammu) January 7, 2024
இந்த வீடியோவைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அம்மு ராமச்சந்திரன், பிக் பாஸ் 7 லயன் லேடிக்கு அன்பான வரவேற்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து பலரும் விசித்ராவை "லயன் லேடி" என்று அழைத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.