நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் பாலிவுட் “டீவா” கேத்ரினா கைஃப்; புகைப்பட தொகுப்பு

கபீர் கான், நடிகை நேகா தூபியா, இசையமைப்பாளர் குருதாஸ் மான், அங்கத் பேடி, அம்ரித்பால் சிங் பிந்த்ரா போன்ற வெகு சிலரே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது.

vicky kaushal katrina kaif are married now

Vicky Kaushal Katrina Kaif are now married : தங்களின் காதலை வெகுநாட்களாக பொதுவெளியில் அறிவித்துக் கொள்ளாமல் இருந்த காதல் ஜோடிகளான நடிகை கேத்ரினா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் சிறப்பாக 9ம் தேதி நடைபெற்று முடிந்தது.

Vicky Kaushal Katrina Kaif are now married

இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்தது எங்களின் மனதில் உள்ள காதலும் நன்றியுணர்வும் தான் என்று இருவரும் கேப்ஷனை பதிவு செய்து தங்களின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளது இந்த ஜோடி.

Vicky Kaushal Katrina Kaif are now married

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களின் செய்திகளுக்கு இரையாகாமல் இருவரும் தங்களின் காதல் உறவு மௌனம் காத்து வந்தனர். ராஜஸ்தானின் பார்வரா கோட்டையில் 120 விருந்தினர்களுடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

கபீர் கான், நடிகை நேகா தூபியா, இசையமைப்பாளர் குருதாஸ் மான், அங்கத் பேடி, அம்ரித்பால் சிங் பிந்த்ரா போன்ற வெகு சிலரே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் முறையே மெகந்தி மற்றும் சங்கீத் போன்ற வைபங்கள் நடைபெற்றது.

கரன் ஜோஹரின் காஃபி வித் கரனில் பங்கேற்ற விக்கியிடம், கேத்ரினா உங்களுடன் இணைந்து படம் நடிக்க விரும்புகிறார் என்று கூறிய தருணத்தில் இருந்து கேத்ரினா மற்றும் விக்கியின் காதல் உறவு குறித்து ரசிகர்கள் தங்களின் சந்தேகத்தை உறுதி செய்தனர். மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் விரைவில் பாலிவுட் நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்காக விரைவில் ரிசப்ஷென் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vicky kaushal katrina kaif are now married see first photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com