Advertisment

பாராட்டை பெறும் பா.ரஞ்சித்... மற்ற இயக்குனர்கள் எப்படி? விக்டிம் விமர்சனம்

விக்டிம் வெப் சிரீஸ், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் ஒரு பாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
Aug 05, 2022 18:28 IST
New Update
பாராட்டை பெறும் பா.ரஞ்சித்... மற்ற இயக்குனர்கள் எப்படி? விக்டிம் விமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் விக்டிம் என்ற 4 பாகங்கள் கொண்ட வெப்சிரீஸ் சோனில் லிவ்வில் இன்று வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வெப் சிரீஸ், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் ஒரு பாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.  

Advertisment

தம்மம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கித்தில் உருவான இந்த பாகத்தில், பரந்து விரிந்த விவசாய நிலத்தின் நடுவே புத்தரின் மார்பளவு சிலை உள்ளது. குணா (குரு சோமசுந்தரம்)என்ற விவசாயி தனது நிலத்தில் விடாமுயற்சியுடன் உழைக்கிறார், அவருடைய மகள் வயலில் காணக்கூடிய அனைத்தையும் மகிழ்விக்க முயற்சிக்கிறாள். அந்த முயற்சியில் அவள் புத்தரின் தோள்களைச் சுற்றி அமர்ந்து, பறக்க முயற்சிக்கிறாள்.

இதை பார்த்து கோபப்படும் அவளது தந்தை குணா, அவர் கடவுள் அவரின் மேல் ஏறக்கூடாது இறங்கு என்று சொல்கிறார். ஆனால் அவர் "அப்பா, புத்தர் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார், அவரை நீங்கள் அழைக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு தனது தந்தையை நோக்கி கண்களை உருட்டி மீண்டும் கத்துகிறாள். ஆனால் மகளிடம் ஆன்மீக பாடங்களை கற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத குணா, அவளை புத்தரின் மேல் இருந்து கீழே இறங்க வைக்க முயற்சிக்கிறான்.

பசுமையான வயல்வெளிக்கு போல் அமைக்கப்பட்டுள்ள இந்த அழகான செட்டைப் பார்த்து ரசிக்கும் வகையில் ஒரு அகலமான ஷாட்டை வைத்துள்ளார். ரஞ்சித். குணாவின் மகள் கேமா புத்தரின் தோள்களில் விளையாடிக் கொண்டிருக்கிறாள், அவளுடைய அப்பா அவள் அருகில் நிற்கிறார். காட்சியில் அப்பாவித்தனமும் அமைதியும் அதிகம்.

ஆனால் சேகர் (கலையரசன்) வருகையுடன் அந்த விஷயங்கள் அனைத்தும் உடைந்து போகின்றன. அவர் கேமா மற்றும் குணா மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஒரு சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த இந்த வெறுப்பு வளர்ந்து பெரிதாகி எல்லை மீறுகிறது.

இரண்டு பெரியவர்களுக்கு இடையே நடந்த சண்டையில், சேகர் வெட்டுபடுகிறார். ஆனால் இது ஒரு விபத்து, குணாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், குணாவிடம் தர்க்கம் செய்ய சேகர் குடும்பத்தினர் தயாராக இல்லை. அவர்கள் வெறுப்பு மற்றும் ஆத்திரத்தால் கண்மூடித்தனமாகி, குணாவை கொலை செய்ய அந்த இடத்திற்கு விரைகிறார்கள். இந்த செயல்களின் மூலம், மனிதர்கள் பகுத்தறிவற்ற விலங்குகளாக மாறும்போது, ​ எந்த பகுத்தறிவும் இல்லாமல், மனித நிலையின் இயல்புநிலை தன்மையை ரஞ்சித் சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

publive-image

மிர்ரேஞ்ச்

அடுத்ததாக எம்.ராஜேஷ் தனது படத்தை ஒரு த்ரில்லர் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் நமக்குக் கொடுப்பது ஒரு திகில் படம்தான். பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது அலுவலகப் பணி காரணமாக சென்னைக்குச் செல்கிறார். அவரது நிறுவனம் சென்னையின் புறநகரில் ஒரு தனி வீட்டை கொடுத்துள்ளது. அந்த வீட்டில் ஆறு மாதங்களுக்கு முன்பு, வீட்டுப் பணிப்பெண்ணின் மொத்த குடும்பமும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதை வைத்து அடுத்த 20 நிமிடங்களுக்கு என்ன நடக்கும் என்பதை யூகித்துவிடலாம். திரைப்படம் விகாரமானது மற்றும் அதில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை காட்ட படத்தின் முடிவில் வைத்த காட்சி பெரிதாக எடுபடவில்லை

கோட்டை பாக்கு வத்தலும்..மொட்டை மாடி சித்தரும்!

publive-image

இயக்குனர் சிம்புதேவனின் திரைப்படம். இது ஒரு கற்பனை நாடகம் கோவிட் லாக்டவுனின் பின்னணியில், ஒரு நிருபர்  தனது பத்திரிகைக்கு ஒரு சுவாரஸ்யமான கதையை கொடுக்க முடியாவிட்டால், அவர் தனது வேலையை விட்டுவிட வேண்டிய நிலையில் உள்ளார் இதனால் லாக்டவுன் மயக்கத்தில், ஒரு சில வெற்றிலைகளை அரைப்பதால், 400 வயது மதிக்கத்தக்க ஒரு ஆன்மீக குரு தனது கதவைத் தட்டுவார் என்று என்ற நம்பிக்கையில் ஒரு செயலை செய்கிறார்.

இதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. இயக்குநர் இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்தாலும், அவர் சரியாக பயன்படுத்த தவறிவிடுகிறார். உலகில் உள்ள மற்ற எல்லா உயிரினங்களுடனும் ஒப்பிடும்போது மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை உணர்த்த சிம்புதேவன் முயற்சித்திருக்கிறார். ஆனால் தனது கதையை சரியான திரையில் கொண்டு சொல்ல முயற்சி செய்யவில்லை. நாசர் மற்றும் தம்பி ராமையாவின் அனுபவத்தை சரியாக பயன்படுத்த இயக்குநர் சிம்புதேவன் தவறிவிட்டார்.

கன்ஃபெஷன்

publive-image

வெங்கட் பிரபுவின் படம் ஹோஸ்டேஜ் படத்தால் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. இயக்குனர் ஜோயல் ஷூமேக்கரின் 2002 த்ரில்லர் போன் பூத் படத்தை இப்படம் நினைவூட்டுகிறது. ஆனால் அந்தப் படத்தைப் போலல்லாமல், கன்ஃபெஷன் நம்மை கதைக்குள் இழுக்க எதுவும் செய்யவில்லை. உரையாடல்கள், அரங்கேற்றம் மற்றும் நடிப்பு, இந்த படத்தை பயனற்றதாக ஆக்குகிறது. முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர தவறிவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema #Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment