யுடியூபில் இரண்டாவதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை பெற்றிருக்கிறது, ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ வீடியோ.
கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் எல்லோரையும் வியக்கத்தக்க வகையில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் அமைந்தது. நடிகர் மோகன்லாலின் ‘வெளிப்பாடிண்டே புஸ்தாகம்’ படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்கு, ஷெரில் என்ற பேராசிரியர் மற்றும் பல பெண்கள் ஆடிய நடனம் எல்லோரையும் கவர்ந்தது. ஒரிஜினல் பாடலைவிட இவர்களது நடனமே அதிக புகழை பெற்றது.
இன்னும் அதற்கு மகுடம் சூட்டும் விதமாக அப்பாடல் யுடியூபில் இரண்டாவதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதுவரை 15 கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.
இந்த பாடலை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் தங்களுக்கு பிடித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டினர். இப்போது, ஜாக்கிசானின் ‘குங்ஃபூ யோகா’ படத்தில் இடம்பெற்ற பாடலை மாற்றி, அவர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Video this jimikki kammal dance clip is the 2nd most watched video on youtube