வித்யா பாலன் நடிப்பில் நீயாட் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் மூலம் வித்யாபாலன், 4 வருடங்கள் கழித்து திரையில் மீண்டும் தோன்றுகிறார்.
லாக்ட் ரூம் மிஸ்டரி வகை கதையை மையமாகக்கொண்டு நீயாட் திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை அனு மேனன் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இதற்கு முன்பு சகுந்தலா தேவி திரைப்படம், வெயிட்டிங், போர் மோர் ஷாட்ஸ் சீரிஸையும் இயக்கி உள்ளார்.
நீயாட் திரைப்படத்தில் வித்யா பாலன் மிஸ்ரா ராவ் என்ற துப்பரியும் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படம் நவ்ஸ் அவுட் மற்றும் கிளாஸ் ஆனியன் என்ற ஆங்கில படத்தைப் போல் இருப்பதாக கூறப்படுகிறது.
மனித கம்யூட்டர் என்று அழைக்கப்படும் ’சகுந்தலா தேவி’ திரைப்படத்தில் வித்யாபலன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் மீண்டும் அவருடன் 2 வது முறையாக பணியாற்ற என்ன காரணம் என்று கேட்டபோது “ எங்கள் இருவருக்கும் ஒரே எண்ண ஓட்டம் உள்ளது. இருவரின் சிந்தனையும் ஒன்று போல் உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “ சகுந்தலா தேவியில்தான் முதலில் வித்தியா பாலனுடன் பணிபுரிந்தேன். அந்த படம் மிகவும் ஆழமான மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய திரைப்படம். அந்த படத்தில் வேலை செய்தது முதல் இவரும் நண்பர்களாக மாறினோம். இருவருக்கும் இடையே நம்பிக்கை வளர்ந்தது. நீயாட் திரைப்படம் அந்த நம்பிக்கையின் தொடர்ச்சிதான். என்னோடு சேர்த்து இத்திரைப்படத்திற்காக அவர் அதிக முன் தயாரிப்புகளை செய்துள்ளார். படப்பிடிப்பின் போது இருவரும் அடிக்கடி தமிழில் பேசிக்கொள்வோம்.” என்று கூறினார்.
“ லாக்ட் ரூம் மிஸ்டரி வகை சினிமா கதை மீது எனக்கு அதிக காதல் இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படம் 50 முதல் 60 இடங்களில் அமைகிறது. படத்தின் கதையை அருமையான எழுத்தாளர்களுடன் சேர்ந்து எழுதி முடித்தேன். வித்யாபாலனிடம் கதையை கூறினேன். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அப்போது கொரோனா ஏற்பட்டதால், ஜனவரி 2022-ல் படபிடிப்பை நடத்தினோம். இந்நிலையில் படத்தின் தொடக்கம் முதல் வித்யாபாலன் இருக்கிறார்” என்று கூறினார்.
நவ்ஸ் அவுட் மற்றும் கிளாஸ் ஆனியன் போல் நீயாட் திரைப்படம் இருப்பதாக கூறியது தொடர்பாக அனு கூறுகையில் “ இக்கதை தனித்துவமான கதை. நவ்ஸ் அவுட் மற்றும் கிளாஸ் ஆனியன் திரைப்படமும் , நீயாட்டும் லாக்ட் ரூம் மிஸ்ட்ரி வைகை திரைப்படங்கள். எல்லா ஆக்ஷன் திரைப்படமும் ’மிஷன் இம்பாசிபல்’ திரைப்படமாக மாறாது. அதுபோல எல்லா ஸ்பை கதைகளும் ஜேம்ஸ் பாண்ட் கதையாக இருக்காது. இதனால் இத்திரைப்படம் தனித்துவமான படமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“