நேற்று ஒரு சிறப்பான நாள். அன்னையர் தினம்! உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தாய்மார்களுடன் எடுத்துக் கொண்ட படங்களை இணையத்தில் வெளியிட்டு, தங்கள் அம்மாக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அன்பான நயன்தாராவுக்கு ஒரு தனித்துவமான அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நயனை தனது வருங்கால குழந்தைகளின் தாய் என்று அழைத்தார். ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ், "எனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, தனது தாயுடன் இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்களையும் வெளியிட்டார் விக்னேஷ். அதோடு நயன்தாராவின் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார், அதில் ஒரு பதிவில் "திருமதி குரியனுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். நீங்கள் இவ்வளவு அழகான குழந்தையை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம் அம்மா. நன்றி அம்மு” என்று தெரிவித்திருந்தார்.