/indian-express-tamil/media/media_files/2025/09/14/vikki-2025-09-14-11-46-11.jpg)
சென்னையில் 7000 சதுர அடியில் பங்களா; விக்னேஷ் சிவன் ஸ்டூடியோவாக ரீ-என்ட்ரி: நயன்தாராவுக்கு பிடித்த இடம் இதுதானாம்!
தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா ’சந்திரமுகி’, ‘கஜினி’, ‘வல்லவன்’, ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘அன்னப்பூரணி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, சினிமாத்துறையில் பல இன்னல்களை தாண்டியே இந்த பட்டத்தை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். தமிழில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் முதல் இந்தியில் ஹோலிவுட் பாட்ஷா ஷாருக்கான் வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு உயிர்- உலக் என்ற இரு குழந்தைகள் உள்ளன. நடிகை நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா, நேப்கின், அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர்.
சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த இந்த காலனி பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைப்பு செய்துள்ளார்கள். தங்களது பிசினஸ் மீட்டிங், ஓய்வு நேரம், நண்பர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஸ்டுடியோவை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மறுக்கட்டமைப்பை தி ஸ்டோரி கலெக்டிவ் நிறுவனர் நிகிதா ரெட்டி செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, கைவினைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள், விசாலமான மாடி என கிளாஸிக்காக இந்த ஸ்டுடியோ உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய நயன்தாரா, “ இந்த அழகியல், மண் நிறங்கள், தேக்கு மரம், நெய்த இழைகள், கைத்தறி மற்றும் பிரம்பு ஆகியவற்றின் நேர்த்தியான கலவையாகும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி விக்னேஷின் ஸ்டுடியோ தான்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.