நடிகை நயன்தாரா விக்னேஷ் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நேற்று அவர்களுக்கு இரண்டாவது ஆண்டு திருமண நாள் ஆகும். இந்நிலையில் நயன்தாராவை விக்னேஷ் சிவன் தூக்குவது போல பகிர்ந்த வீடியோ டிரண்டாகி உள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டுதான் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா இணைந்தார். இதற்கு முன்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது நயன்தாராவும், அவர்கள் வெளிநாடு சென்று ஒன்றாக சுற்றுலா செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களின் இரண்டாவது ஆண்டு திருமணம் நாளை நேற்று கொண்டாடினர். இந்நிலையில் நயன்தாராவை தூக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இதுபோல நயன்தாராவும், விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எங்களது திருமண நாள் என்றும், எனது இரண்டு குழந்தைகள்தான் எனக்கு எல்லாம் என்றும் தெரிவித்துள்ளார்.