Advertisment

அஞ்சலி காட்டில் பட மழை: விக்னேஷ் சிவனுடன் ‘கமிடெட்’

Netflix Anthology Movie: விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். 

author-image
WebDesk
Sep 04, 2019 09:44 IST
Anjali cleaning her kitchen, corona lockdown

அஞ்சலி

Anjali: நடிகை அஞ்சலி கடைசியாக அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கிய ’லிசா’ என்ற திகில் படத்தில் நடித்திருந்தார். இப்போது ’நாடோடிகள் 2, அருள்நிதி - சீனு ராமசாமியின் படம், காண்பது பொய், ஓ, சைலன்ஸ், கிருஷ்ணன் ஜெயராஜின் படம்’ என பிஸியாக இருக்கிறார்.

Advertisment

கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இணையும் ஆந்தாலஜி படம்!

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் அஞ்சலி கமிட்டாகியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸிற்காக 4 இயக்குநர்கள் இனைந்து பணியாற்றும் ஆந்தாலஜி திரைப்படம். இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார்.

விக்னேஷ் சிவன் தவிர, மற்ற மூன்று கதைகளையும் இயக்குநர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இயக்கவுள்ளனர். மீதமுள்ள இந்த பாகங்களில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தவிர, அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ப்ரீ புரொடகஷன் பணிகளில் பிஸியாக உள்ளார் விக்னேஷ் சிவன்.

#Vignesh Shivan #Anjali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment