நடிகர் கமல் ஹாசன் எப்போதுமே ஒரு மாபெறும் கலைஞர்தான். எல்லா விதத்திலும் தனது தனித்துவத்தை காட்டுவார் என்பதில் நமக்கு சந்தேகமேயில்லைதான். அப்படிதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கமல் , உரையாடும் வீடியோவை அவரது இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த செஸ் ஒலிம்பியாடை தமிழக அரசு ஏற்று நடத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாடை பிரபலப்படுத்த சென்னை நேப்பியர் பாலமே செஸ் போர்டு போல் கருப்பு வெள்ளை சதுர கட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்பு இடம் பெற்றது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பொருப்பெடுத்து நடத்தினார்.
இந்த நிகழ்வு தொடர்பாக கமலுடன் நடந்த உரையாடல் தொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் கமல் “ ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, மாடுபிடி என்பதில் கூட காளை அடக்குதல் என்று நாம் சொல்லுவதில்லை. ஏனென்றால் அடுத்த நாள் அந்த மாட்டை விவசாயத்திற்கு கொண்டு போய்விடுவார்கள்” என்று அவர் பேசியுள்ளார்.