/tamil-ie/media/media_files/uploads/2018/07/Vignesh-Shivan-and-Nayanthara.jpg)
nayanthara vignesh pics
தென் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் “கோகலமாவு கோகிலா” திரைப்படத்தில் மேலும் ஒரு சேவையை நயன்தாராவிற்காக செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயந்தாரா, யோகிபாபு மற்றும் சரண்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்காக ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்துப் பாடல்களுக்கு வரிகள் எழுதினார்கள். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே இருக்கும் ஆழமான பாச உறவைப் பற்றி பேசாதவர்களே இல்லை. இந்நிலையில் நயன்க்காக அவர் எழுதிய “ஒரே ஒரு” என்ற பாடலை எழுதினார்.
Kolamaavu kokila : கோலமாவு கோகிலா
இதுவரை இப்படத்தில் நயன்தாரா மீதுள்ள அதீத காதலுக்காக பாடல் எழுதிய விக்னேஷ், தற்போது பாடகராகவும் உதயமாகியுள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் “கோகோ” என்ற பாடலை பாடியுள்ளார். இது குறித்து நயன்தாராவிடம் சர்பிரைஸாக கூறியுள்ளார். இப்படத்தில் விக்னேஷ் சிவன் பாடியது நயன்தாராவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றது. இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிரடியாய் உருவாகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீடு நாளை நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாகப் படத்தின் 30 வினாடி பாடல் வெளியீடு டீசர் வெளியாகியுள்ளது.
All set #kolamaavukokila Full album and trailer from Thursday July 5th 🎥🎶 Get ready 💥👍 pic.twitter.com/O81vVMONbI
— Nayanthara✨ (@NayantharaU) July 3, 2018
July 2018
‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டிற்காக நயன்தாரா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.