கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நயன்தாரா, சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியா உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து ஒரு ராணி போல திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்’ சில நாட்களுக்கு முன்பு, சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். விக்கியும், நயன்தாராவும் கோயிலில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமண வாழ்த்துகளை கூறினர். தொடர்ந்து சமீபத்தில் கூட இருவரும் கோயிலுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
அப்படியானால் நயனுக்கும், விக்கிக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? என பல ரசிகர்களும் யோசனையில் ஆழ்ந்தனர். அதற்கு காரணம், அந்த வீடியோவில்’ நயன் தனது நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது தான். சா
இப்படி இருக்க, இப்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குரியன் அப்பா. மகிழ்ச்சி என்பது நீங்கள் சிரிப்பதைக் காண்பது, நீங்கள் சாப்பிடுவதைப் பார்ப்பது, நீங்கள் எங்களைப் பார்ப்பது, உங்கள் இருப்பு எங்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது! என்றென்றும் எங்களுடன் இருப்பதற்கான அனைத்து வலிமையையும் சக்தியையும் கடவுள் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். லவ் யூ அப்பா. நீங்கள் எங்கள் ஆசீர்வாதம்” என்று எழுதியுள்ளார்.
நயன்தாரா, விக்கி கூட்டணியில் அடுத்த படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
விக்கி இயக்கும் நான்காவது படம் இதுவாகும். அவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் தமிழ் தொகுப்பான பாவ கதைகளில் ஒரு பகுதியை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“