எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி... நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்!!!

கடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன் தாராவிடம் தனது கல்யாண ஆசையை  பப்ளிக்கா  போட்டு உடைத்த செய்தி தான்  இன்றைய கோலிவுட் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடுகிறது.  அந்த வகையில் நேற்று இரவு   இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டிருந்த  ஸ்டேட்டஸ் தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்பது தெரிய வந்தது.

உடனே போய் என்னனு பார்த்தா,  விக்னேஷ், விரைவில் திரைக்கு வரவிருக்கும் நயன் தாராவின்   ’கோலமாவு  கோகிலா’ படத்தின் பாடல் வரிகளை பதிவு செய்திருந்தார். முதலில் படிப்பவர்களுக்கு அது வெறும் பாடல் வரியாகத்தான் தெரியும். மீண்டும் ஒருமுறை நன்கு வாசித்தால் தெரியும்  பாடல் வழியாக நயன் தாராவிடம் விக்னேஷ் தனது திருமண ஆசையை சொல்கிறார் என்று.

‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா ?நயந்தாரா அப்படினு ஒரு  கேள்வியையும் வைத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடிகள் குறித்து ஏகப்பட்ட  தகவல்கள் வெளிவந்த நிலையில்,  கடந்த மாதம்  நடைப்பெற்ற விழா ஒன்றில் நயன்தாரா தைரியமாக வருங்கால கணவருக்கு நன்றி என்று மேடையில் கூறி  வதந்தியை உறுதி செய்தார்.

அதன் பின்பு, இந்த ஜோடி அமெரிக்காவில் எடுத்த ஃபோட்டோ, ஆப்பிரிக்காவில் எடுத்த ஃபோட்டோ , இரண்டு பேருடோ,  பெயரின் முதல் எழுத்து டீ ஷர்ட் போட்டோனு செல்ஃபீஸா எடுத்த  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து  தெறிக்க விட்டனர்.

எப்ப கல்யாணம்?  ன்னு  ரசிகர்கள் காத்திருக்க,  கடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார். இப்போது இதற்கான பதில் நயன் தாராவின் கையில் தான்….

 

×Close
×Close