vijat tv ramar : விஜய் டிவி ராமர். அறிமுகமே தேவைப்படாது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை. அந்த அளவுக்கு இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயகன், ரோபோ சங்கருக்கு அடுத்து ராமர் தான்.
Advertisment
இவருக்காகவே விஜய் டிவி தனி தனி ஷோக்களை அறிமுகம் செய்தது. ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே டி.ஆர்.பியில் இடம் பிடித்தது. ” என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” “ஆத்தாடி என்ன உடம்பு” “போலீஸைக் கூப்பிடுவேன்” போன்ற வசனங்கள் ராமர் ரசிகர்களின் ஆல் டைல் ஃபேவரெட்.
ஆணாக இருந்தாலும் பெண் வேடத்தில் அசத்துவர் ராமர். 20 வருடங்களாக சின்னத்திரையில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் ராமர் இப்போது பெரிய திரையிலும் முகம் காட்ட தொடங்கி விட்டார். கூடிய விரைவில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.
ராமரின் ஸ்பெசாலிட்டியே ஹிட்டான பாடலை கலாய்ப்பது தான். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடலை மரண கலாய் கலாய்த்து ராமர் வெளியிட்டிருந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து அந்த வாரத்தில் யூடியூபில் ட்ரெண்ட் அடித்தது.
ராமரின் சொந்த ஊர், மதுரை பக்கத்துல மேலூர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு அவ்வப்போது இலவசமாக சில காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ராமருக்கு அவரின் மனைவி என்றால் கொள்ளை பிரியம்.முதன்முறையாக அவர் விருது வாங்கிய விஜய் டிவி நிகழ்ச்சியில் மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து மேடையை ஆனந்த கண்ணீரில் நனய வைத்திருந்தார்.