/tamil-ie/media/media_files/uploads/2018/04/vijay-62-shooting-video-leaked.jpg)
நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Vijay#Thalapathy62#Thalapathy asked his fans to ride with him ..#ThalapathyVijay#Vijay62@actorvijay ????????????????????????????
— SnirmalaSiva (@SnirmalaSiva) April 30, 2018
THALAPATHY THE MASS pic.twitter.com/KIiEsvDLt1
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தின் உருவாக்கம் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் மற்ற முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாகச் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் நடைபெற்றது.
இந்தப் படப்பிடிப்பு காட்சியில், நடிகர் விஜய் பைக்கில் மாணவர்களுடன் இணைந்து பேரணியாய் செல்வது காட்சியாக்கப்பட்டது. இதனைச் சுற்றி இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.