Advertisment

விஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா... வில்லன் இவர் தானா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalapathi 63, விஜய் 63

thalapathi 63, விஜய் 63

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான சர்கார் படம் பெறும் சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. பல கோடி வசூலை பார்த்த சர்கார் படத்திற்கு பிறகு ஒரு சின்ன ரெஸ்டு எடுத்துவிட்டு மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் விஜய்.

விஜய் 63 படத்தில் நயன்தாரா

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக விஜய் 63-ல் இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் நான்காவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் விவேக் இப்படத்திலும் பாடல்கள் எழுதுகிறார். மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். நயன்தாரா 2009ல் வெளியான வில்லு படத்திற்குப் பிறகு மீண்டும் தற்போது 2019ல் விஜய் 63-ல் ஜோடி சேரவுள்ளார்.

மேலும் விளையாட்டு சம்மந்தமாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வலம்வர உள்ளார் என்ற தகவலும் பரவிவருகிறது. மேலும் ‘பொல்லாதவன்’, ‘வேட்டையாடு விளையாடு’ மற்றும் ‘பைரவா’ ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரம் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்திலும் வில்லனாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tamil Cinema Actor Vijay Nayanthara Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment