scorecardresearch

விஜய் சொன்ன அந்த பதில் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்

”வரட்டும்பா.. நம்ம நண்பர் படம் நன்றாக ஓடட்டும்” என்று துணிவு வெளியாவது குறித்து விஜய் கருத்து தெரிவித்தாக நடிகர் ஷாம் கூறியுள்ளார்.

விஜய் சொன்ன அந்த பதில் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்

”வரட்டும்பா.. நம்ம நண்பர் படம் நன்றாக ஓடட்டும்” என்று துணிவு வெளியாவது குறித்து விஜய் கருத்து தெரிவித்தாக நடிகர் ஷாம் கூறியுள்ளார்.

எம்ஜிஆர்-சிவாஜி, கமல் -ரஜினி இந்த வரிசையில் அஜித் – விஜய் என்பது என்பதுதான் 90-களின் டாப் போட்டி என்று கூற வேண்டும். முகநூல் தொடங்கிய காலத்தில் அஜித் -விஜய் ரசிகர்கள் மாறி மாறி கருத்து போர் புரிவார்கள். இந்த பஞ்சாயத்து மிகவும் பிரபலம். ஆனால் இரு நடிகர்களும் நண்பர்கள்தான். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட “ நடிகர் அஜித்போல் உடை அணிந்து செல்லலாம் என்று நினைத்தேன்” என்று அவர் கூறியது வைரல் ஆனது.

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் துணிவு படத்தில் நடிகர் ஷாம் நடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ நடிகர் அஜித் படம் பொங்களுக்கு வெளியாக இருக்கிறது என்று விஜய்யிடம் கூறினேன். அவர் நண்பர் படம் வரட்டும்பா, நன்றாக ஓடட்டும்பா என்றார் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay about ajith thunivu