ஹேமா கன்னத்தில் பளார் அறை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் முதல் நாளே சம்பவம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் களமிறங்கும் ஹேமா; முதலே சம்பவம் நடந்ததாக வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் களமிறங்கும் ஹேமா; முதலே சம்பவம் நடந்ததாக வீடியோ

author-image
WebDesk
New Update
hema

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் களமிறங்கும் ஹேமா; முதலே சம்பவம் நடந்ததாக வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க தேர்வானது முதல், முதல் நாள் சூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் வரை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி முடிந்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா கேரக்டரில் சிறப்பாக நடித்தவர் ஹேமா. இந்தநிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் உடனடியாக தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் இருந்த பலர் இல்லாத நிலையில், சிலர் மட்டுமே மீண்டும் தேர்வாகியுள்ளனர்.

அந்தவகையில் இரண்டாம் பாகத்திலும் ஹேமா நடித்து வருகிறார். இதனையடுத்து ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முதல் நாள் சூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

முதல் பாகத்தின் கடைசி நாள் சூட்டிங் முடிந்ததும் அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். ஆனால் இப்போது இரண்டாம் பாகத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சின்ன வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்பதால், ஹேர் ஸ்டைலில் சின்ன மாற்றம் செய்துள்ளேன்.

Advertisment
Advertisements

ரொம்ப வருடத்திற்கு பிறகு சீரியலில் சுடிதார் அணிந்து நடிக்கிறேன். முதல் நாளே சூட்டிங்கிலே என்னுடைய அப்பா கேரக்டர் என்னை அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. முதல் நாள் சூட்டிங்கிலே அடி வாங்கிட்டேன். எனக்கு கையில் சரியான அடி. ஆனால் அப்பா சொல்றார், உன்னோட மோதிரம் என் கையில் பட்டு வலிக்குனு சொல்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. இரண்டாம் பாகத்திற்கும் அது தொடரும் என நம்புகிறேன். என்னால் முடிந்தவரை என்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

hema Pandian Stores Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: