தென்னிந்திய சினிமாவின் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் திகழ்ந்துவருகிறார். தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில்'ஹுக்கும்'என்றொரு பாடல் வருகிறது. அந்தப் பாடலில் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை சிலர் திருட முயற்சிக்கின்றனர் என்ற பாடல் வரிகள் வருகின்றன.
Advertisment
மேலும் இந்தப் பாடல் வரிகள் நடிகர் விஜய்யை சுட்டிக் காட்டுவதாக சமூக வலைதளளத்தில், “வார்” வெடித்துள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய், ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார் என அழைத்த 5 நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
'சந்திரமுகி' படத்தின் சக்சஸ்மீட்டிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விஜய். அப்போது, ரஜினிகாந்த் கூறியதை நினைவு கூர்ந்த விஜய், “விழும்போதெல்லாம் துணிச்சலாக எழும்பும் அவரை குதிரை” என்று அழைத்தார். நடிகர் ரஜினிகாந்தை சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று விஜய் அழைத்தார்.
Advertisment
Advertisements
ஒருமுறை ஒரு ரசிகர் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார். அதற்குப் பதிலளித்த விஜய், ஒவ்வொரு துறையிலும் நம்பர் 1 நட்சத்திரம் இருப்பதாகவும், ஒரு துறையில் நுழையும் போது முதலிடத்தை எட்ட வேண்டும் என்பது ஒருவரின் ஆசை என்றும் கூறினார். அதேபோல் விஜய்யும் விரும்புகிறார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்றார்.
விஜய் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் உரையாடி ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். உரையாடலின் போது, ஒரு ரசிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று பதிலளித்தார்.
'கத்தி' படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு விருது கிடைத்தபோது, தொகுப்பாளர் தளபதி அடுத்த சூப்பர் ஸ்டாராக விரும்புவாரா? எனக் கேள்வியெழுப்பினார். அப்போது, தளபதியாக இருப்பது மகிழ்ச்சி என்றும், சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க விரும்பவில்லை என்றும் நடிகர் விஜய் கூறினார்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவிற்கு விஜய்யும் ரஜினிகாந்தும் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது ரஜினிகாந்த்-ஐ சூப்பர் ஸ்டார் என அழைத்து அவர் வழியை பின்பற்றுவதாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“