விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், வாரிசிடம் குனிவு, துணிவில்லா வாரிசு என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் விஜய் மற்றும் அஜித்க்கு தனி இடம் உண்டு. இருவருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு காலத்தில் மோதிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால், இருவரின் ரசிகர்களும் எப்போதும் மோதி வருகிறார்கள். இருவரின் படங்கள் ரிலீஸ் ஆகையில் அவரவர் ரசிகர்கள் பெரிய வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து நின்றேன்; யோசிக்காமல் உதவினார் ரஜினி; நடிகை ரமா பிரபா
அதேநேரம், ஒருவரின் ரசிகர்கள் மற்றவரின் படத்தை கழுவி ஊற்றுவதும் நடந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர், அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகும். அப்போது தமிழகமே திருவிழா கோலம் போல் இருக்கும். ஆனால் சில வருடங்களாக இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆக வில்லை.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி (1996), பூவே உனக்காக vs கல்லூரி வாசல் (1996), காதலுக்கு மரியாதை vs ரெட்டை ஜடை வயசு (1997), உன்னை தேடி vs துள்ளாத மனமும் துள்ளும் (1999), குஷி vs உன்னை கொடு என்னை தருவேன் (2003) போன்ற பல பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் பல ஆண்டுகளாக நடந்துள்ளன.
இந்தநிலையில், இந்தப் பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆக உள்ளன. அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படங்களின் பாடல்கள் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளன. அஜித்க்கு கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படமும், விஜய்க்கு கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சரியாக போகாத நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிஜ வாழ்க்கையில் சிறந்த தோழமையை வெளிப்படுத்திய இரண்டு ஹீரோக்கள், அவர்களது ரசிகர்களால் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள், இது சமூக ஊடகங்களில் அசிங்கமான ரசிகர் சண்டைகளுக்கு வழிவகுக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/twitter-trend.jpg)
படங்கள் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், ரசிகர்கள் இப்போதே மோதலை தொடங்கிவிட்டனர். தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக்குகளில், இரண்டு படங்களைப் பற்றிய ஹேஷ்டேக்குகளும் உள்ளன. #வாரிசிடம் குனிவு, #துணிவில்லா வாரிசு ஆகிய ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் மாறி மாறி பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர்களின் சில பதிவுகள் இங்கே:
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil