நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் இந்த வரிசையில் விஜய் – அஜித் என்ற போட்டி 90 களில் ஆதிக்கம் செலுத்தியது. தல- தளபதி ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வித போட்டி நிலவும். ஆனால் இரண்டு நடிகர்களும் நட்பாகத்தான் இருந்தனர்.
கிட்டதட்ட 9 வருடங்கள் கழித்து அஜித் – விஜய் படங்களில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் 10 லட்சத்துக்கு அதிகமானவர்கள் அதை பார்த்தனர். இந்நிலையில் நேற்று மாலை விஜய் படத்தின் வாரிசு டிரெய்லர் வெளியானது. இதுவும் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரு படங்களும் 11 தேதி வெளியாக உள்ளது.