நட்புக்கு இலக்கணம் இப்படித் தான் இருக்கணும் - கெத்து காட்டும் விஜய்யின் 'ரியல் நண்பன்' சஞ்சீவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay and sanjeev kanmani serial sun tv - நட்புக்கு இலக்கணம் இப்படித் தான் இருக்கணும் - கெத்து காட்டும் விஜய்யின் 'ரியல்' நண்பன் சஞ்சீவ்

vijay and sanjeev kanmani serial sun tv - நட்புக்கு இலக்கணம் இப்படித் தான் இருக்கணும் - கெத்து காட்டும் விஜய்யின் 'ரியல்' நண்பன் சஞ்சீவ்

உலகமே 'தளபதி' என்று கொண்டாடும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நடிகர் சஞ்சீவ்.

Advertisment

இவரைப் பற்றி நாம் பல செய்திகள் கேள்விப்பட்டிருந்தாலும், இன்று வரை விஜய்யின் மீது அதிக அக்கறை கொண்ட நண்பனாகவும் அதேசமயம், தன் நலம் சார்ந்த விஷயங்களில் விஜய்யை விட்டு விலகி நின்று, உண்மையான நட்புக்கு சான்றாக இருப்பது பலருக்கும் தெரியாது.

விஜய் சினிமாவில் நடிக்கத் தொடங்கும் முன்பே, ஜோசப்பின் கல்லூரி கால நண்பராக இருந்தவர் சஞ்சீவ். விஜய் அப்போது ஒரு பஜாஜ் எம்80 ஸ்கூட்டரில் தான் கல்லூரிக்கு செல்வாராம். தந்தை ஒரு பெரிய இயக்குனர் என்றாலும், விஜய் பயன்படுத்திய காஸ்ட்லி வாகனம் பஜாஜ் எம்80 தான் என்கிறார் சஞ்சீவ்.

கல்லூரி விழாக்களில் விஜய்க்கு நடனம் சொல்லிக் கொடுத்தவரே சஞ்சீவ் தான். குழுவாக ஆடும் போது, முதல் வரிசையில் சஞ்சீவ் ஆட, பின் வரிசையில் நிற்கும் விஜய், சஞ்சீவின் மூவ்மெண்ட்ஸ்களை பார்த்து ஆடுவாராம்.

Advertisment
Advertisements

ஒருக்கட்டத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்து, மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிக் கொண்ட விஜய், சில வருடங்களில் பெரும் வளர்ச்சிப் பெற்றார்.

சஞ்சீவ் நினைத்திருந்தால், விஜய்யின் பல படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே விஜய் படங்களில் தலை காட்டியிருக்கிறார். அதுவும், மிகச் சாதாரண ரோலில் மட்டுமே.

பிறகு, 2002 ஆம் ஆண்டில் 'மெட்டிஒலி' தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார் சஞ்சீவ். பல எதிர்மறை கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். சஞ்சீவை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது அந்த நாடகம். 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளையும் சஞ்சீவ் வென்றார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலின் ஹீரோ நம்ம சஞ்சீவ் தான்.

விஜய் இவ்வளவு உச்சத்தில் இருக்கும் போதும், சஞ்சீவ் உட்பட நண்பர்களை சந்திப்பது வாடிக்கை. அப்போது கூட சஞ்சீவ் தனது கரியர் குறித்து பெரிதாக விவாதித்துக் கொள்வது இல்லையாம்.

விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோ என்றால், நண்பர் சஞ்சீவ் இன்று முன்னணி சீரியல் ஹீரோ என்றால் அது மிகையல்ல.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: