Advertisment

'கெஞ்சி கேட்கிறேன்.. ரயில்ல தள்ளி விட்டு தண்டிங்க'.. நடிகர் விஜய் ஆண்டனி ஆவேசம்

மாணவி சத்யா மற்றும் அவரது தந்தை உடல்கள் இன்று மாலை தகனம் செய்யப்பட்டன.

author-image
WebDesk
New Update
Vijay Antony says, Dont waste years speedy maximum punishment to killer satheesh

கொலையுண்ட சத்யா- கைது செய்யப்பட்ட சதீஷ்

சென்னையில் கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற, அதே ரயிலில் தள்ளிவிட்டு தண்டிங்க என கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

Advertisment

இது குறித்து அவர் ட்விட்டரில், “சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி சத்யா வியாழக்கிழமை (அக்.13) மாலை ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்டு சதீஷ் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் துக்கம் தாளாத பெண்ணின் தந்தை விஷமருந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

தற்போது, கல்லூரி மாணவி சத்யாவின் தாயார் தனியாக தவிக்கவிடப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு வேறு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளி சதீஷை காவலர்கள் முகத்தை மூடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுவந்தனர்.

அப்போது கொலை குற்றவாளியை முகத்தை மூடி ஆஜர்படுத்துவது ஏன் என அங்கிருந்த வழக்குரைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சதீஷை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

சதீஷிடம் போலீசார் இரகசியமான இடத்தில்வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு வைரலாகிவருகிறது.

இதற்கிடையில், மாணவி சத்யா மற்றும் அவரது தந்தை உடல்கள் இன்று மாலை தகனம் செய்யப்பட்டன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Antony
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment