Vijay antony statement on daughters death : நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா. 12ஆம் வகுப்பு மாணவியான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில்ந விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துள்ளேன்.
அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“