நடிகர் அஜித் சிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் போன் மூலம் நடிகர் அஜித்திடம் நலம் விசாரித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் இவர்கள் இருவருடைய படங்களுக்கு இடையேதா கடுமையான போட்டி நிலவுகிறது. அதே போல, இவர்களின் ரசிகர்களுக்கு இடையேயான போட்டியும் மோதலும் அவ்வப்போது நடப்பது உண்டு.
நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே போல, நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், ஆன்லைன் செயலி மூலம் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் கடந்த 2 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின், நடிகர் அஜித் சனிக்கிழமை (09.03.2024) காலை வீடு திரும்பினார்.
நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியைக் கேட்டு, நடிகர் விஜய் போன் மூலம் அஜித்திடம் நலம் விசாரித்த தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித், தனது மகன் ஆர்திக்கின் கால்பந்தாட்ட போட்டியைக் காண பள்ளி மைதானத்துக்கு குடும்பத்துடன் சென்று கண்டு களித்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை இரவே (07.03.2024) அஜித்தை போனில் தொடர்புகொண்டு அஜித்தின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த உரையாடலின்போது, அஜித் மற்றும் விஜய் இருவரும் 5 நிமிடத்திற்கு பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“