Beast Movie review: நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் அதிகாலை முதலே பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர்.
நடிகர் பயில்வான் சமீப காலமாக நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு யூடியூப்பில் விமர்சனம் செய்திவதில் களமிறங்கியுள்ளார். அவரின் பல வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர், தியேட்டர்களில் இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் குறித்து விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, ஷாப்பிங் மாலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தீவிரவாதிகள், தங்கள் தலைவனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். விஜய் தனி ஒருவனாக சண்டையிட்டு மக்களை காப்பாற்றி தீவிரவாதிகள் அழிப்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. அதேசமயம், படத்தின் இறுதியில் பிளேன் எப்படி வந்தது, எப்படி அவர் சென்றார் என்பதலாம் லாஜிக் இல்லா மேஜிக்.
விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் சர்க்கரை பொங்கலாக வேண்டுமானால் பூஜா ஹெக்டே இருக்கலாம். அழகாக, கவர்ச்சியாக படத்தில் வந்து 2 பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்.
தீவிரவாதியை சுடுகையில், சிலரின் தப்பான வழிகாட்டுதலால் குழந்தையை உயிரிழந்துவிடுகிறது. அந்த குற்ற உணர்ச்சியில் ரா ஏஜென்டில் இருந்து விஜய் வெளியேறுவருகிறார் அதான் ஆரம்பம்.
படத்தோடு முதல் பாதி, கலப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஆனா அடுத்த பாதில, விறுவிறுப்பு குறைய ஆரம்பிச்சிட்டு. பினிஷிங்-ல ஒரு பாட்டு போட்டு படத்த முடிக்குறாங்க.
ஜேம்ஸ்பாண்ட் போலவே தனிஒருவனாக விஜய் போராடுகிறார். படத்தில், அவரை இந்தியன் ஜேம்ஸ்பாண்ட் எனவும் அழைக்கின்றனர்.
விடிவி கணேஷின் காமெடி சீன்ஸ் ரசிக்கும்படி இருந்தது. படத்தில் கமர்சியல் ஐடம் எல்லாம் இருந்தாலும், புதுமை இல்லை. ஆனால், பீஸ்ட் ஒரு கமர்சியல் எஎன்டர்டெயின்மென்ட் ட்ரீட். குடும்பமாக சென்று, பீஸ்ட் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
மியூசிக் பொறுத்தவரை, ஒரே பேக்கிரவுண்ட் மியூசிக்கை படம் முழுவதும் போட்டே அனிருத் முடித்துவிட்டார். அனிருத்திடம் கூடுதலாக எதிர்ப்பார்க்கிறோம். பைனலாக, இப்படத்தில் நெல்சனை பாராட்ட வேண்டியது அல்ல, அவருக்கு பதிலாக நடன இயக்குநரையும், சண்டை மாஸ்டரையும் தான் பாராட்ட வேண்டும். நெல்சன் தீலிப்குமார விட, அவங்க தான் ரொம்ப உழைச்சிருக்காங்க…
இதான் பீஸ்ட் படத்திற்கான பைல்வான் விமர்சனம். நீங்க படம் பார்த்திருந்தா, உங்க விமர்சனத்தை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil