Advertisment

Beast review: பீஸ்ட் முதல் விமர்சனம்: விஜய்யின் சினிமா கேரியரிலேயே சிறந்த நடிப்பு

Beast review : இயக்குனர் நெல்சன் இயகத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் ரிலீசுக்கு முன்னதாக வெளியாகி இருக்கிறது.

author-image
WebDesk
New Update
பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த பீஸ்ட்; வசூல் மழை பொழியும் கேஜிஎஃப் 2

Beast movie review

Beast review Vijay Beast review: இயக்குனர் நெல்சன் இயகத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள உமர் சந்து என்பவர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்களுக்காக இங்கே தருகிறோம்.

Advertisment

தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயகத்தில் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை தனது ரசிகர்களுக்கும் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கும் ஒரு நல்ல விருந்தாக அளித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் சித்திரை முதல் நாளுக்கு முன்னதாக, ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் பீஸ்ட் படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிர்மல்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதற்கு முன்னதாக, பீஸ்ட் திரைப்படம் குறித்து வெளியான முதல் பார்வையை ரசிகர்களுக்காக இங்கே தருகிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சினிமா விமர்சகரும், இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள உமர் சந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பீஸ்ட்' திரைப்படத்தைப் பற்றிய முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதில், தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் நேர்த்தியான ஆக்‌ஷன்-த்ரில்லர் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் 'நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். மேலும், விஜய் திரையில் வரும்போதெல்லாம் ஆக்‌ஷன் அனல் பறக்கிறது. படத்தில் தொய்வே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தனது சினிமா கேரியரிலேயே பீஸ்ட் படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று உமர் சந்து புகழ்ந்திருக்கிறார்.

publive-image

உமர் சந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பீஸ்ட், அனைத்து அம்சங்களிலும் சிறப்பான திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் நிறைந்த படம். விஜயின் கதாபாத்திரம் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் முழுமையான புரிதலோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லை. இது விஜய்யின் பிரமாதமான படம். அவருடைய சினிமா வாழ்க்கையிலே சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மொத்ததில் பீஸ்ட் ஒரு மிடுக்கான ஆக்‌ஷன் திரில்லராக உள்ளதால் நிச்சயம் உங்களை கவரும். விறுவிறுப்பான திரைக்கதைக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, பீஸ்ட் படத்துக்கு 4 ஸ்டார் கொடுத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Vijay Beastmode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment