நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் உலகம் முழுவதும் வெளியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் முதல் நாள் காட்சியை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே, வி.டி.வி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அளித்த விமர்சனங்களை பார்ப்போம்.
தளபதியை இதுவரை இதுபோன்று நான் பார்த்ததில்லை. அவரது நடனமும் மிகவும் அருமை என்று கூறியுள்ளார்.
பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறும் என்று மற்றொரு ரசிகர் வாழ்த்தியுள்ளார்.
பின்னணி இசையும், காமெடியும் மிகச் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன என்று வாங்க கொஞ்சம் ரிவ்யூ பண்லாம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்பஸ்டர்… இதான் ரிவ்யூ என்ற ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் படத்தை கொண்டுவார்கள் என்று சினிமாவை உற்று நோக்கி வரும் ஒருவர் கூறியுள்ளார்.
Beast Movie Release LIVE Updates: வெளியானது விஜய்யின் பீஸ்ட்.. திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள்.. விடிய விடிய கொண்டாட்டம்!
மொத்தத்தில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “