Advertisment

#BeastMode: வெறித்தனமான டிரெய்லர்.. ஹவுஸ்ஃபுல் ஆன தியேட்டர்ஸ்.. மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது. அந்த ஹைப் இன்னமும் குறையவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Beast Movie

Vijay Beat First Day special Show Tickets Sold Out

நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதையும் வென்றார்.

Advertisment

தொடர்ந்து தனது நெருங்கிய நண்பன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் இந்த படம் வெளியாகி’ பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தொடர் ஊரடங்கால், வீடுகளுக்குள்ளே முடங்கியிருந்து மன அழுத்தம் ஏற்பட்ட ரசிகர்களுக்கு டாக்டர் படம் ஒரு சிறந்த ட்ரீட் ஆக இருந்தது.

இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் கொடுக்க, நெல்சன்’ 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியது.

இப்போது நெல்சன், தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்குகிறார். இதற்கிடையே’ பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.

அந்த ஹைப் இன்னமும் குறையவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் புயலைக் கிளப்பியது. படத்தில் இயக்குனர் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் நெல்சனின் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த ஏராளமான நடிகர்கள் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

&feature=emb_logo

பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதன்கிழமையன்று முன்பதிவு துவங்கி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. படத்தின் ட்ரெய்லர் மற்றும் முன்பதிவுக்கு கிடைத்த அமோக வரவேற்பைப் பார்த்து, பீஸ்ட் படம்’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பீஸ்ட் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை ரெட்ஜெயண்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. படம் வெளியாவதற்கு ஒருவாரம் உள்ள நிலையில் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment