மனோஜ் குமார் ஆர்
2005 ஆம் ஆண்டு தீபாவளி விடுமுறையின்போது விஜய் நடித்த சிவகாசி படம் வெளியானது. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார் இயக்குனர் பேரரசு. இந்தப் படத்தில் விஜய்யின் பாத்திரம் மிகவும் பழமைவாத உழைக்கும் வர்க்க இளைஞராக எழுதப்பட்டிருந்தது. அதில் ஒரு காட்சியில், கதாநாயகன் அடுத்துவரும் காட்சிகளில் ஹீரோயின் ஹேமா மீது காதல் கொள்கிறான். ஹீரோயின் ஹேமா கதாபாத்திரத்தில் அசின் நடித்தார். அதில் ஹீரோ அவளது நவநாகரிக ஆடையை அவமானப்படுத்துகிறான். “என்ன சேலையும் காணோம் உள்பாவாடையும் காணோம். வெறும் ஜட்டியோட நிக்கற.” என்று கேட்கிறான். அதற்கு ஹேமா “இது ஷார்ட்ஸ்” என்று சொல்கிறாள். அதற்கு அவன் “உங்களுக்கு அது ஷாட்ஸ் எங்களுக்கு (ஆண்களுக்கு) அது வெறும் ஜட்டி.” அடுத்து “ஆமா! என்ன மேல மாராப்பையும் காணோம் ஜாக்கெட்டையும் காணோம் வெறும் பிராவோட நிக்கற?” என்று கேட்கிறான். அதற்கு அவள் “இது ஸ்லீவ்லெஸ்” என்கிறாள். அதற்கு அவன் “உங்களுக்கு அது ஸ்லீவ்லெஸ் எங்களுக்கு அது பிரா” என்று சிவகாசி வெடிக்கிறான். அவன் அதோடு நிறுத்தாமல் பாதிக்கப்படும் பெண்களையே குற்றம் சாட்டுகிறான்.
மேலும், பெண்கள் குறைவான ஆடைகளை அணிவதால்தான் ஆண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறான்.
“பொண்ணா லட்சணமா அழகா சேலை கட்டி இழுத்து போர்த்திக்கினு வந்தனு வச்சுக்கோ… ஆம்பளைங்கலாம் உன்னை பொண்ணா இல்லை மகாலட்சுமியா நினைச்சு கையெடுத்து கும்பிடுவாங்க.” என்று சிவகாசி ஆணாதிக்கத்தின் பிற்போக்குத்தனமான கருத்துக்களை வலுப்படுத்துகிறான். இது போல, படத்தில் இன்னும் சில காட்சிகள் உள்ளன.
அதற்கு தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோ ஒரு பெண்ணை அவதூறாக அவமதித்த காட்சிக்கு கைத்தட்டி விசில் அடிக்கிறார்கள். இருப்பினும், இன்று அந்த காட்சியை மறுபடியூம் பார்க்கும்போது வலி ஏற்படுத்துகிறது. ஆட்சேபனைக்குரிய காட்சிகள் பரப்புகின்ற கருத்துக்களை விஜய் கூட மன்னிக்க மாட்டார். அவரது சமீபத்திய படம் பிகில் இன்றைய விஜய் 2005 இன் விஜயை ஏன் பாராட்டவில்லை என்பதற்கு ஒரு வலுவான காரணத்தை உருவாக்குகிறது.
எனது முந்தைய பகுதியில், “அஜீத்திடமிருந்து விஜய் என்ன கற்றுக்கொள்ள முடியும்” என்று நான் பரிந்துரை செய்திருந்தேன். அங்கே, பெண் கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் விஜய்யின் படங்கள் எவ்வளவு பின்தங்கியிருந்தன என்பது குறித்து நான் குறிபிட்டிருந்தேன். “விஜய்யின் சினிமா உலகம் பெண்களை நடத்தும் முறையின் அடிப்படையில் பெரிய அளவில் வளர்ச்சியடையாதது” என்பதை நான் கவனித்தேன். அந்த வகையில், பிகில் படம் சூப்பர்ஸ்டார் ஆவதற்கான ஒரு பாய்ச்சல்.
உதாரணமாக, விஜய் மைக்கேல் காயத்ரியின் (வர்ஷா பொல்லம்மா) கணவரை சந்திக்கும் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். கணவர் மிகவும் பழமைவாதி (சிவகாசி போன்றவர்). ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது சகோதரியின் அபிலாஷைகளைத் தொடர அவர் அனுமதிக்கவில்லை. அவர் பெண் சமையலறை வேலைகளுக்கு உரியவள் என்று கற்பிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்.
“சொல்லுங்கள், உங்கள் மனைவி மற்ற ஆண்களுக்கு முன்னால் ஷாட்ஸுடன் ஓடினால் உங்களுக்கு சரியா?” என்று காயத்ரியின் கணவர் மைக்கேல் கேட்கிறார். சிவகாசி இந்த மனிதனை நேசித்திருப்பான். ஆனால், மைக்கேல் ஆத்திரத்துடன் தனது முஷ்டியைப் மடக்குகிறார். அவர் சிவகாசியை வெறுத்திருக்கக்கூடும்.
இந்த விஜய் படம் முற்றிலும்… விஜய் பற்றி அல்ல. ஆமாம், நிச்சயமாக, இந்த படத்தில் பல குறிப்புகள் உள்ளன. அது விஜய் அடுத்த தலைவன் (முதலமைச்சர் புரிந்துகொள்ளவும்) என்று கூறுகிறது. படத்தின் முதல் பாதி பெரும்பகுதி விஜய்யின் முக்கிய ரசிகர் கூட்டத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாஸ் ஸ்டாருக்கான வாகனம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது எல்லாம் பழைய பானியாக பார்க்கப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்சியில் “இது பழசா இருக்கலாம் ஆனால், இப்போது குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம்” என்று விஜய் கூறுகிறார். படத்தில் இந்த வசனம் வேறு சூழலில் மற்றும் வேறு காரணத்திற்காக கூறப்படுகிறது. ஆனால், இது பார்வையாளர்களுக்கு படத்தை மிகச் சுருக்கமாகக் கூறுகிறது.
பிகில் ராயப்பன் மற்றும் மைக்கேல் (விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்) போன்றோர் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள். அட்லீ மற்றும் அவரது இணை எழுத்தாளர் எஸ்.ரமணா கிரிவாசன் ஆகியோர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை இரண்டாவது பாதியில் அதிக நேரம் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த படத்தின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று, ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய அனிதாவை (ரெபா மோனிகா ஜான்) மைக்கேல் சந்திக்கும் போது, அவளாகவே அவளது தனிமையில் இருந்து விடுபடுவதற்கு அவளை ஊக்குவிக்க, மைக்கேல் ஒரு எழுச்சியூட்டும் கதையை விவரிக்கிறார். அவர் எதிர்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும் நினைவுபடுத்துகிறார். முரண்பாடுகளுக்கு எதிராக அவள் செய்த சாதனைகளை அவர் நினைவு கூர்ந்தார். பின்னர், அவர் அவளைத் தாக்குபவரைச் சமாளிக்கும் சக்தியைக் கூட அளிக்கிறார். மைக்கேல் அனிதாவுக்கான போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவளுடைய எதிரிகளை எதிர்கொள்ள அவர் அவளுக்கு அதிகாரம் அளிக்கிறார். அதில் அவர் பின்னணியில் இருக்கிறார். அவர் ஊக்குவிப்பவராக இருக்கிறார். இந்த காட்சி தியேட்டரில் வரும்போது வரவேற்பு கிடைக்கிறது. பார்வையாளர்கள் கூச்சலிட்டு கைத்தட்டி விசிலடிக்கிறார்கள். ஆனால், அங்கே விஜய் அல்ல அனிதா ஸ்லோ மோஷனில் நடக்கிறாள். பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான் எழுச்சியுட்டும் இசையமைத்திருக்கிறார்.
பிகில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் படமாக இல்லாமல் இருக்கலாம் என்பதை இயக்குனர் அட்லீ நமக்கு உறுதியளிக்கிறார். ஆனால், இது ஒரு தொடக்கம். இது விஜய்யின் சினிமா உலகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான முன்னேற்றம்.