விஜய் ரசிகரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? பேரூராட்சி அதிகாரியை சிக்கவைத்த வைரல் வீடியோ

'நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’

'நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Birthday Celebration, Uthangarai Town Panchayat Executive officer Raja Suspension

Vijay Birthday Celebration, Uthangarai Town Panchayat Executive officer Raja Suspension

Vijay: பேரூராட்சி அலுவலகத்தில், நடிகர் விஜய் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடியதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கப் தயிர் போதும்ங்க…. ரிசல்ட் அப்புறம் பாருங்க!

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பல்வேறு 'வாட்ஸ் ஆப்' குரூப்களில் இந்த விஷயம் நேற்று வெளியானது. அதில், ”கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு, மாவட்டத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி அலுவலத்தில், விஜய் பிறந்த நாளை, அவரது ரசிகர் மன்றத்தினர் விழா கொண்டாடி, நலத்திட்ட உதவி வழங்கியுள்ளனர். இக்கட்டான கால கட்டத்தில், அலுவலக வளாகத்தின் உள்ளே, பேனர் வைத்து செயல் அலுவலர் தலைமையில், கேக் வெட்டி கொண்டாடியது, சட்டத்தை மீறிய செயலாகும். நடிகர் விஜய் பிறந்தநாளை, அரசு அலுவலகத்தில் கொண்டாடியது எந்த வகையில் நியாயம்?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.

வீட்டுக் கொல்லையில் கிடைக்கும் பழத்தில் எவ்வளவு நன்மைகள்: மிஸ் பண்ணாதீங்க!

Advertisment
Advertisements

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு,  'மாஸ்க்' மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Actor Vijay Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: